Breaking News

வால்பாறை அருகே கேரள பகுதியில் யானை தாக்கி பெண் காயம்


வால்பாறையை சேர்ந்தவர் ராஜகுமாரி (57), இவர் கேரள பகுதியில் வழக்குப் பாறை எஸ்டேட்டில் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஒற்றை யானையைப் பார்த்து அங்கிருந்த தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விட்டனர். ராஜகுமாரி கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது. இந்நிலையில், யானை தாக்கியதில் காயம் அடைந்தவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டுள்ளார். கேரள போலீஸார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments