மழைக்காலங்களில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர் தகவல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இதை அடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்கேட்டிங் மைதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். பின் அவர் கூறுகையில்... தமிழக முதல்வர் அறிவித்த உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் இன்று 24 மணி நேரம் கிராமங்களுக்கு சென்று அரசு அறிவித்த திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 2000 பேர் பங்கேற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதற்கு பொள்ளாச்சி நகராட்சி குறைந்த கட்டணங்கள் வசூலித்தாலும் சிறந்த நகராட்சியாக செயல்படுகிறது மேலும் மழைக் காலங்கள் தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. பொது மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தார். இதில் சார் ஆட்சியர் கேத்த தீரின் சரண்யா,பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments