ஆட்சியரிடம் எம்எல்ஏ செ.தாமோதரன் மனு
கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை குறித்த கோரிக்கை மனு அளித்தார்.
கோரிக்கைகள் பின்வருமாறு....
1. வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் கேஸ் பைப் லைனுக்காக தோண்டப்பட்டு குண்டு மூலியமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சேரும் சகதியும் ஆகி பொதுமக்கள் சென்றால் விபத்துக்கள் ஏற்படுகின்றன வாகனம் செல்ல முடியாமல் உள்ளது இதற்கு தீர்வு காண சாலையில் உள்ள குழிகளை மண் நிரப்பி சாலைகள் விரைவில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
2. கிணத்துக்கடவு ஒன்றியம் பொட்டையாண்டி பிரம்பு ஊராட்சியில் உள்ள மலைவாழ் மக்கள் காலனிக்கு பகுதி நேர நியாய விலை கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
3. திருமலையான் பாளையம் பேரூராட்சி மயிலம்பாடி கிராமத்தில் 22 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகிறார்கள் இங்குள்ள 22 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
4. மதுக்கரை நகராட்சி L & T பைபாஸ் பகுதியில் புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள தனியார் பார் பொதுமக்களுக்கு இடையூறு உள்ளதாக கோரிக்கை வைத்தார்கள் இதனை அடுத்து பொதுமக்களும் கோரிக்கை ஏற்ப இந்த தனியார் பார் மூடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
5. கோவை மாநகராட்சி 95வது வார்டு பகுதியில் வசித்து வரும் 4 குடும்பங்கள் வீடு மாநகராட்சி அதிகாரிகளை இடிக்கப்பட்டது விசாரித்து பார்த்ததில் இந்த இடம் அரசு புறம்போக்குக்கு சொந்தமான இடம் என தெரிய வந்தது எனவே இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
6. தனியார் விவசாயி தனது இடத்தை ஆதிதிராவிட நலத்துறைக்கு தர முன்வந்ததை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லி அரசு இந்த நிலத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிடருக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
7. மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் பொது நிதியில் வேலை உத்தரவு வழங்க தாமதம் ஆகுவதால் உடனடியாக வேலை உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பிரச்சினைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தார் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனைத்து கோரிக்கைகள் மீதும் பரிசீலனை செய்வதாக கூறினார். வெள்ளலூர் பேரூராட்சி தலைவரும் பேரூராட்சி செயலாளருமான வெள்ளலூர் மருதசாலம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், 95 வார்டு செயலாளர் ஹிழர், வீரப்பக்கவுண்டனூர் லோகநாதன், கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
No comments