Breaking News

உடுமலையில் நவராத்திரி விழா கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்



 உடுமலையில் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழாவுக்காக, விற்பனைக்கு அழகாக கொலு பொம்மைகள் வந்துள்ளன.நவராத்திரி பண்டிகையை வீடுகளில் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.‌. இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், நவராத்திரி என்றும், மற்ற மாநிலத்தில், தசரா, துர்கா பூஜை என்ற பெயரிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது 9 நாட்கள் நடக்கும் இந்த விழா, முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர். குழந்தைகளிடம் ஆன்மிக சிந்தனையை வளர்க்கவும், அவர்களுக்கு கடவுள் வேடமிட்டு மகிழ்வதும், உறவுகள், அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டும் வகையில், கொலுவுக்கு அழைக்கும் விதம் என ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு பெற்றது.நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில், 7 மற்றும் 9 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, பலவிதமான பொம்மைகள் அடுக்கப்படும். இந்தாண்டு வரும், 3 ம் தேதி நவராத்திரி விழா துவங்கி 11.10வரை விழாவை கொண்டாட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. உடுமலை ஆண்டாள் சீனிவாசன் வீதியில் உள்ள கடையில்  கொலு பொம்மைகள் விற்பனைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில், மரப்பாச்சி பொம்மைகள், சத்திய நாராயண பூஜை செட், அத்தி வரதர், திருப்பதி செட் ,அஷ்ட லஷ்மி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ஒன்பது வகையான நரசிம்மர், ராமர் டீ கடை, பொம்மைகள், என, 50க்கும் மேற்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொம்மைகள், 70 ரூபாயில் இருந்து, 1,390 ரூபாய் வரை சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.உடுமலை ராஜேந்திரா ரோட்டில் கொலு பொம்மைகள் விற்பனையாளர்  கூறுகையில், 'நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் பார்வைக்காக படிகட்டுகள் அமைத்து கொலு பொம்மைகள்  வைக்கப்பட்டுள்ளன. புதுவிதமான பொம்மைகள்வந்துள்ளன,' என்றனர்.

No comments