அன்னம் அறக்கட்டளை ஆண்டு விழா
அன்னம் அறக்கட்டளையின் 6ம் ஆண்டு விழா பொள்ளாச்சி கே.கே.ஜி திருமண மண்டபத்தில் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னம் அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி சந்திப்பு இணைந்து நடத்திய சாதனையாளர்களின் சங்கமம் மற்றும் குறும்பட நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக சேவை செய்பவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சமூகத்திற்கு தேவையான சிறந்த குறும்படங்களுக்கு முதல் பரிசாக 20,000, இரண்டாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், மூன்றாவது பரிசாக ஐந்தாயிரம் வழங்கப்பட்டது. ஊக்கப் பரிசாக 5000 விழிப்புணர்வு படங்களுக்கு வழங்கப்பட்டது. அன்னும் அறக்கட்டளை சார்பில் அன்னதான கூடம் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை மககளுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் நிர்வாகி மேனகா செந்தில்குமார், திரைப்பட தொகுப்பாளர் லெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அன்னம் அறக்கட்டளை நிர்வாகி திஸ்மா, பொள்ளாச்சி சந்திப்பு நிர்வாகி முகமது அப்ரித், கோவை கிளை பொறுப்பாளர் தீனதயாளன் ஆகியோர் நன்றி கூறினர்.
No comments