டிசம்பர் 12 இல் மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு டிசம்பர் 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். வெள்ளி சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் கோயிலுக்கு வருகை புரிவார்கள் மாசாணியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, பாலாலயம் முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர்கள் அர்ஜுனன், புவனேஸ்வரி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
No comments