பொள்ளாச்சியில் மலையாள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை மலையாள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் அஸ்தம நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்களை மிகவும் நேசித்த மகாபலி மன்னர் திருவோண நட்சத்திர நாளில் வந்து மக்களை எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து செல்வதாக மலையாள மக்களால் நம்பப்படுகிறது. அவரை வரவேற்கும் விதமாகவும், தாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை வாசலில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடினார்கள்.
No comments