Breaking News

வால்பாறையில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்

பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வால்பாறை நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வகையில், வால்பாறை நகர கழக, செயலாளர் குட்டி என்கின்ற சுதாகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரக் கழக  அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நகர கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, மாவட்ட அணி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர், மற்றும் பிரதிநிதிகள, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments