Breaking News

சார்பு நீதிமன்றத்தில் இ சேவா கேந்திர மையம்

இன்று (25.09.2024)காலை 10 மணிக்கு சார்பு நீதிமன்ற வளாகத்தில் E- சேவா கேந்திர மையத்தை சார்பு நீதிபதி மோகனவள்ளி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி  பாரதிராஜன்,  கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுஜாதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1 சுவேதாரன்யன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 பிரகாசம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் துரை, மூத்த வழக்கறிஞர்கள் செந்தில், ராமஅருளரசன், ஜாஃபர் ஷெரீப், ஜெகன் மற்றும் நீதிமன்ற அலுவலர்களும் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்தில் இ ஃபைலிங் முறையில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு உதவுவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்திள்ளது.

No comments