அரசு பேருந்தை இயக்க இடையூறு செய்த ஆறு பேர் கைது
அரசு பேருந்து இயக்க இடையூறு செய்த ஆறு பேர் கைது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏழு முப்பது மணிக்கு வெள்ளமலையிலிருந்து வால்பாறையை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் சுப்பிரமணியர் கோவில் வீதி வளாகம் வந்தபோது திருப்பூரில் இருந்து சுற்றுலா வந்த ஆறு பேர் கொண்ட குழு பொலியிரோ வாகனத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தியதால் பேருந்து செல்ல முடியாத நிலையில் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலர் வாகனத்தை எடுக்க கூறியுள்ளார்.
ஆனால் நான் பிஜேபி யில் மாவட்ட பொறுப்பாளர் எனவும் வக்கீலாக உள்ளேன் எனவும் கூறி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையூறு செய்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வால்பாறை காவல்துறை அவர்களை அழைத்து விசாரணை செய்ததில்
1. முரளி இவர் LLB தற்போது படித்து கொண்டுள்ளார்.
2. முரளி BJP இளைஞர் அணியில் உள்ளதாக கூறப்படுகிறது.
3. துரைமுருகன் 30
4. வெங்கடேஷ் 25 சௌந்தர்ராஜன்
5. அருள் 30
6. கோதண்டன் 42 , ஆறு பேர் இவர்கள்
அனைவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கைது செய்து கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
No comments