விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்த உடுமலை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி பகுதியில் நேற்று இரவு சாலை விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இந்த உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த
உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது வாகனத்தை நிறுத்தினர் . பின்னர் காரில் இருந்து இறங்கி அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தலைமை மருத்துவரிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
No comments