தொடர் வேகத்தடைகளை அகற்றக் கோரி மனு
பொள்ளாச்சி சுற்று வட்டார நெடுஞ்சாலைகளில் தொடர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வேகத்தடைகளால் தினம்தோறும் விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்கையில் அதிர்வுகள் ஏற்பட்டு பொது மக்கள் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பேருந்துகள் மற்றும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதால் அன்றாட பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே நெடுஞ்சாலைகளில் தொடர் வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி நமது "சிறகுகள் மக்கள் அமைப்பு" சார்பாக இன்று 16/09/24 (திங்கள்) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கபட்டது.
No comments