Breaking News

புதிய நியாய விலைக்கடை திறப்பு





பொள்ளாச்சி அடுத்த வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடையை புதன்கிழமை எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் திறந்து வைத்தார்.
 பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவனாம்பாளையம் ஊராட்சி வகுத்தம்பாளையம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைக்க பொதுமக்கள் எம்எல்ஏ விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நிதியில் இருந்து புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டு புதன்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் திறந்துவைத்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ முத்துகருப்பண்ணசாமி, ஒன்றியச்செயலாளர்கள் பாப்பு, செந்தில்குமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ராதாமணி, ஒன்றியக்குழுத்தலைவர் நாகராணி, துணைத்தலைவர் எம்எம்ஆர் துரை, நெகமம் பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர் தண்டபாணி உட்பட பலர் இருந்தனர்.

----

No comments