பட்டணம் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக இளைஞரணியில் இணைந்தனர்
கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரகாஷ் எம்பி ஆகியோர் வழிகாட்டுதலில் கோவை தெற்கு மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் KVKS சபரிகார்த்திகேயன் ஆலோசனையின் பேரில் சூலூர் தெற்கு ஒன்றியம், பட்டணம் ஊராட்சி11-வது பூத்தில் முதல் கட்டமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்து கொண்டனர். பூர்த்தி செய்யப்பட்ட திமுக இளைஞரணி உறுப்பினர் படிவங்களை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூதியிடம் தெற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் செல்வக்குமார், பொதுக்குழு உறுபினர் ரகு துரைராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். மேலும் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை பணியை விரைவாக முடிக்க உறுதுணையாக இருந்த பாகமுகவர்கள், வார்டு செயலாளர்கள், கிளைசெயலாளர் நாகராஜ், ராஜ்குமார் மனோகர்,கிருஷ்ணகுமார்,தாமோதரசாமி, ஹரிபிரகாஷ், ஆறுச்சாமி, பத்மாவதி, சிங்கார வேலன் ஐடி-விங் லோகநாதன், ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
No comments