Breaking News

சாமளாபுரம் பேரூராட்சியில் 80 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வழிப்பாதை தூர்வாரும் பணி துவக்கம் - அமைச்சர் நேரில் ஆய்வு



சாமளாபுரம் பேரூராட்சியில் 80 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வழிபாதை தூர்வாரும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
சாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள பெரும்பள்ளம் திருச்சி சாலையில் உள்ள ஆறாக்குளம், கோம்பக்காடு  வழியாக சாமளாபுரம் பெரிய குளத்திற்கு மழை நீரைக் கொண்டு வரும் பிரதான நீர்வழிப்பாதை. இந்த நீர்வழிப்பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் இந்த தடுப்பணைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் போது சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 80 ஆண்டுகளாக இந்த பெரும்பள்ளம் தூர்வாரப்படாமலும், குப்பைகள் கொட்டப்பட்டும் வந்தது. அதனால் பெரிய குளத்துக்கு மழை நீர் முழுமையாக வந்து சேராமல் இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதைய டுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பெரும்பள்ளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. 
இந்த பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், திமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி அன்பரசு, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments