வால்பாறையில் போலீசார் இடம் இருந்து தப்பிக்க முயன்றவர் தவறி விழுந்து கை முறிவு
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் என்பவர் வெற்றிவேல் என்பவரை கத்தியால் தாக்கச் சென்றுள்ளார். அத்துடன் பணம் கேட்டுட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோந்து காவலர்கள் ஆயுதத்துடன் சுற்று திரிந்த ஹரிஹரன் என்பவரை பிடிக்கச் சென்று போது காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார்.அப்போது நடுமலை தேயிலை காட்டின் அருகே கீழே தவறி விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. வால்பாறை தேயிலை தோட்டங்களுடன் பசுமையாகவும், அமைதியாகவும் இருக்கும் பகுதியாக உள்ளது. இங்கு பட்டாக்கத்திகளுடன் ஒருவர் சுற்றி திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வால்பாறையில் இது போன்று அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாராவது பட்டாக்கத்திகள், கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
No comments