பொள்ளாச்சியில் லோக் அதாலத்
பொள்ளாச்சியில் தேசிய லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுவருகிறது. பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்ற லோக் அதாலத்திற்கு சப்-கோர்ட்டு நீதிபதி மோகனவள்ளி தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன், கூடுதல் மாவ்டட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, ஜே.எம்.1 நீதிபதி சுவேதாரண்யன், வழக்குரைஞர் சங்கத்தலைவர் துரை, வழக்குரைஞர்கள் சுப்பிரமணியன்,பிரவீண், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
மோட்டார் வாகன விபத்துக்கள் 59 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வுகாணப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. காசோலை வழக்குகள் 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.95 லட்சத்து 57 ஆயிரத்து 547 க்கு சமரசம் ஆனது. மேலும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதில் சப்-கோர்ட்டு, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம்.1, ஜே.எம்.2 ஆகிய கோர்ட்டுகளில் உள்ள 1363 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.537 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.5 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 662க்கு சமரசம் செய்யப்பட்டது.
No comments