Breaking News

ஆனைமலையில் மிலாது மத நல்லிணக்க பேரணி

நபிகள் நாயகத்தின் 1499 வது பிறந்தநாளை முன்னிட்டு மீலாது மதநல்லிணக்க பேரணி ஆனை மலையில் நடைபெற்றது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குழந்தைகளும் பெரியோர்களும் திரளாக கலந்து கொண்டனர். இப்பேரணியை துவக்கி வைத்து இஸ்லாமிய குழந்தைகளுக்கும் மக்களுக்கும் ஆனைமலை பேரூராட்சி தலைவர் S.கலைச்செல்வி சாந்தலிங்க குமார்  மற்றும் ஆனைமலை தி.மு.க  அவைத்தலைவர் சிங்காரம் சீனிவாசன் தலைமை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் A.H ஜாபர் அலி ஆனைமலை மேற்கு ஒன்றிய திமுக அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி  இளைஞர் அணியை சேர்ந்த A.முஹம்மது நஃபீஸ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழக கிளைச் செயலாளர் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் இனிப்பு மற்றும் பரிசு பொருட்களையும் பரிமாறிக் கொண்டனர்.

No comments