சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
மேலாண்மை துறை மாணவி நந்தனா வரவேற்றார். முன்னாள் காவல்துறை இயக்குனர் ரவி சிறப்புரை ஆற்றினார். மது, போதை இல்லா சமுதாயத்திற்கு மாணவர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் எனவும், கல்லூரி பருவத்தில் பயனுள்ளவாறு பயன்படுத்தி விடாமுயற்சியுடன் வாழ்க்கையில் உச்சத்தினை அடைய வேண்டும் என்று பேசினார்.
புதிய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி வாழ்த்துரை வழங்கினர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கணினி பயன்பாட்டியல் மாணவி கமலி நன்றி கூறினார். நிகழ்ச்சியில், மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments