ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தின விழா
தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சீதாலட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மையர் ஐரின் வேதமணி தலைமை வகித்தார். பொள்ளாச்சி சார்- ஆட்சியர் கேத்தரின் சரண்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மதிப்பு கூட்டு பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பேசினார்.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவி இயக்குனர் ரகோத்துமன் தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்கள் குறித்து பேசினார். ஆனைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபிநாத் தோட்டக்கலை துறையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினார். தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஆராய்ச்சி குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தென்னை விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு சவால்களை கூறி அதை எதிர்கொள்ளும் முறைகளை விளக்கினார். முன்னோடி விவசாயிகளான ரஞ்சித்குமார், ஓ.வி.ஆர்., சோமசுந்தரம், ராஜமுடி என்கிற திருமலைசாமி, பாலதண்டபாணி, சக்திவேல், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் தென்னையில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜலிங்கம் நன்றி தெரிவித்தார். டிராக்டர் கொண்டு தென்னையில் வட்டப்பாத்தி அமைக்கும் இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், பட்டைகளை தூளாக்கும் இயந்திரம் போன்றவற்றின் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. 150 க்கும் அதிகமான விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments