மாசாணியம்மன் கோயிலில் பணி புரிந்த போலி பெண் போலீஸ்
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் முதல்நிலை காவலர் உடையணிந்து கூட்ட நெரிசலில் பணியாற்றிய பெண்ணிடம் ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அங்கு போலீஸாரும் பாதுகாப்பு பணியிலும், கூட்ட நெரிசலை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஐபிக்கள் வரிசையில் முதல் நிலை காவலர் உடையணிந்த பெண் ஒருவர் கூட்டத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பணியில் இருந்த ஆனைமலை போலீஸார் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தியதில் அவர் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரீத்தா(34) என்பதும், காவல் பணியின் மீதுள்ள ஈடுபாட்டினால் காவல்துறை உடை அணிந்து பணிபுரிந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
No comments