வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
வால்பாறையில் இந்து முன்னணி சார்பில் 33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் AST சேகர் தலைமை தாங்கினார். RS. லோகநாதன் நகர பொது செயலாளர் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் ச. ராஜேஷ், மாநிலச் செயலாளர் சி எம் அண்ணாதுரை கோவை கோட்டச் செயலாளர் பாலச்சந்திரன், அசோக் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சதீஷ், cv ரவீந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் நாராயணன் கூட்ட நிகழ்வில் நன்றி தெரிவித்தார். வால்பாறை நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பொதுக் கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கோனார் ஜுவல்லரி உரிமையாளர் வள்ளிக்கண்ணு, கிருஷ்ணா ஜுவல்லரி உரிமையாளர் சீனிவாசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முக்கிய தெருக்களில் ஊர்வலம் நடைபெற்றது. இறுதியாக நடுமலை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
No comments