Breaking News

கல்லூரி ஓணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரளா சமாஜம் ஜி.கே.ராமதாஸ்


பொள்ளாச்சி அடுத்துள்ள பூசாரிபட்டி பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை ஒட்டி மாணவ மாணவிகள் பூக்கோலம் இட்டும் மகாபலி ஊர்வலம் நடத்தியும் உற்சாகமாக நடனமாடியும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
 இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக இந்த கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவிகள் கேரளா பாரம்பரிய உடை அணிந்து பூ கோலம் இட்டு நடனமாடி மகிழ்ந்தனர்.
 இதில் ஒவ்வொரு பிரிவின் கீழ் பூக்கோலம் இட்ட மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இக்கல்லூரியின் தாளாளர் க. மகேந்திரன் தலைமையில் கல்லூரியின் முதல்வர் கண்ணன் உட்பட கல்லூரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கேரள சமாஜத்தின் சிறப்பு விருந்தினர்களாக ஜி. கே. ராமதாஸ், என். ஜி. கோசி அஞ்சு ஆகியோர் கலந்துகொண்டு பூ கோல போட்டியில் கலந்து கொண்ட
மாணவிகளுக்கும் மகாபலி வேடமிட்ட மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். கேரளாவில் திருவோண தினம் கொண்டாடுவது போல் பொள்ளாச்சியில் கல்லூரியில் மாணவ மாணவிகள் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினர்.

No comments