Breaking News

ராமு கல்லூரியில் ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை மலையாள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் அஸ்தம நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்களை மிகவும் நேசித்த மகாபலி மன்னர் திருவோண நட்சத்திர நாளில் வந்து மக்களை எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து செல்வதாக மலையாள மக்களால் நம்பப்படுகிறது. அவரை வரவேற்கும் விதமாகவும், தாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் பொள்ளாச்சி அடுத்த நா.மூ. சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. மாணவிகள் அத்தப்பூ கோலம் இட்டு கேரள பாரம்பரிய உடை அணிந்து சண்டை மேளம் முழங்க சிறப்பாக கொண்டாடினார்கள். மாணவர்கள் மாணவிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை கல்லூரி செயலர் நித்தியானந்தம், முதல்வர் பிரேமலதா, கல்லூரி நிர்வாகி ஹரி முரளி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

No comments