Breaking News

பொள்ளாச்சி அருகே 4500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்

கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக கேரளா எல்லையில் உள்ள செம்மணாம்பதி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரளா கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கேரளா கலால் துறை  துணை ஆணையர் ராகேஷ் தலைமையிலான கலால் துறையினரும், வால்பாறை டிஎஸ்பி  தலைமையில் ஆனைமலை போலீஸார் மற்றும் பேரூர் மதுவிலக்கு போலீஸார்  இணைந்து செம்மணாம்பதியில், 
கேரளா மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த  டோனி (45) என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாந்தோப்பில்  எரி சாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 150 கேன்களில் இருந்த  4500 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றினர். இதுகுறித்து பேரூர் உட்கோட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சபீஸ் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பாலக்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோட்டத்து உரிமையாளர் டோனியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது,
செமணாம்பதியில் டோனி என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சபீஸ்
மீது கேரளா கலால் துறையில்  தோட்டத்தில் எரிசராயம் பதுக்கியதாக
ஏற்கனவே வழக்கு உள்ளது. சபீஸின் நடவடிக்கைகளை கேரளா கலால் துறையினர் கண்காணித்து வந்ததால்.
கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியில் உள்ள 
மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து அதில் எரி சாராயம் பதுக்கி வைத்துள்ளார். கள்ளில் கலந்து  விற்பதற்காக எரி சாராயம் கொதிக்க வைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எரி சாராயம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றோம் என்றனர்.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, செமணாம்பதி கிராமம் தமிழக கேரளா எல்லையில் உள்ளது. செமணாம்பதி பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். அதனால், கேரளாவில் இருந்து சோதனை சாவடியை கடந்து தமிழகத்திற்குள் எரிசாராயம் வரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆகவே இந்த எரி சாராயம் தமிழகத்தில் இருந்து இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சந்தேகமாக உள்ளது என்றனர்.

No comments