விவசாய செலவுகள் விலைகளுக்கான கமிஷன் தலைவரை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி.V.ஜெயராமன் நேரில் சந்திப்பு
கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் , விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் தலைவர் விஜய் பால் சர்மாவை சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் நேரில் சந்தித்தார்.
இந்தியாவிலேயே தென்னை விவசாயம் பொள்ளாச்சி , கிணத்துக்கடவு , உடுமலை , பேராவூரணி , அதிராமபட்டினம் ஆகிய பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது.
தமிழக அரசு இதனை தனியாக கணக்கிடாமல், தமிழ்நாடு முழுவதும் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் முந்தைய புள்ளிவிவரமான தென்னை மரம் ஒன்றுக்கு சராசரியாக 73 தேங்காய் விளைகிறது என்ற புள்ளி விவரத்தை அளித்ததனால் அதற்கேற்றவாறு மத்திய அரசு கொப்பரை கொள்முதல் செய்கிறது. ஆனால், தமிழ்நாடு தென்னை ஆராய்ச்சி நிலையங்களில் தென்னை மரம் ஒன்றிற்கு குறைந்தது 125 தேங்காய் விளைகிறது என்ற புள்ளி விவரத்தின் அடிப்படையில் மத்திய அரசு கொப்பரை கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும். கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.111.60 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தென்னை மரம் ஒன்றுக்கு ஆண்டு முழுவதும் எட்டு முறை தேங்காய் வெட்டலாம், ஆனால் ஒருமுறை வெட்டும் தேங்காய் மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. ஆகவே, நெல் , கரும்பு போன்ற மற்ற விளை பொருட்களை கொள்முதல் செய்வது போல தேங்காயையும் ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், நியாய விலை கடைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைத்தார்.
No comments