சோலையார் எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
,
கோவை மாவட்டம் வால்பாறை, அருகில் உள்ள,சோலையார் எஸ்டேட் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவன் தலைமை வகித்தார். சண்முகப்பிரியா, முத்துலட்சுமி, தங்க ராணி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக வட்டாரக்கல்வி அலுவலர் த.பன்னீர் செல்வம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர் கீதாலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை, துணைதலைவர் சுகன்யா, கல்வியாளர் சித்ரா,
பழைய மாணவர் உஷாநந்தினி,
உறுப்பினர்... நித்தியா, சங்கரி, சுதா,
அனிதா, சூர்யா, முனியம்மாள்
ரவி, சுரேஷ், அப்துல் ஹக்கீம், குமார் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments