அன்னூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
அன்னூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
"மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் கணேசபுரம் பகுதியில் காட்டம்பட்டி, குப்பேபாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பொதுமக்களுக்காக நடைபெற்றது.
விழாவிற்கு, அன்னூர் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.தனபாலன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர்/ தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் காட்டம்பட்டி காயத்ரி பாலகிருஷ்ணன், குப்பேபாளையம் சாந்தி அருண்குமார், மசக்கவுண்டன் செட்டிபாளையம் புஷ்பவதி பாக்கியராஜ், காட்டம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் லட்சுமி காந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் குமரி அனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் வரவேற்றார்கள். பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், ராஜன், ஊராட்சி செயலர்கள் வேல்முருகன், பழனிச்சாமி, பிரகாஷ், நாச்சிமுத்து, ரவிச்சந்திரன், சதீஷ், ஈஸ்வரன், ரங்கசாமி, தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments