நிரம்பும் நிலையில் பரம்பிக்குளம் அணை வெள்ள அபாய எச்சரிக்கை
நிரம்பும் நிலையில் பரம்பிக்குளம் அணை
வெள்ள அபாய எச்சரிக்கை
பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளவு கொண்ட பரம்பிக்குளம் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. இதில் அதிக கொள்ளவு கொண்டது பரம்பிக்குளம் அணை.
17.82 டிஎம்சி கொள்ளவும், 72 அடி உயரமும் கொண்டது.
இந்த அணை நிரம்பினால் ஒரு ஆண்டுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் பிரச்சனை இருக்காது. சோலையாறு, ஆழியாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில், பரம்பிக்குளம் அணை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு 69.50 அடிக்கு நீர் நிரம்பியது. மொத்தம் உயரம் 72 அடியாகும். அதேபோல், கொள்ளவில் 17.25 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால், கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments