Breaking News

உடுமலை அருகே அமராவதி சைனிக் ராணுவ பள்ளியில் மரம் நடுவிழா

உடுமலை அருகே அமராவதி சைனிக் ராணுவ பள்ளியில் மரம் நடுவிழா

சைனிக் பள்ளி அமராவதிநகர் பள்ளி வளாகத்தில் சுற்றுசூழல்
பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வை வலியுறுத்தும் "தாய்க்கு
செடி 'நிகழ்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் உள்ளூர்
சமூகத்தினரிடையே சுற்றுசூழல் விழிப்புணர்வை வளர்ப்பதில் இந்த
நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், 
ஆசிரியர்கள் மற்றும் அமராவதி கிராம மக்கள் ஆர்வத்துடன்
பங்கேற்றனர். பள்ளி முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் மற்றும்
பள்ளி வளாகத்தின் முதல் பெண் மணி  லட்சுமி மணிகண் டன்
ஆகியோர் மரம் நடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கேப்டன் கே.மணிகண் டன் தனது தொடக்க உரையில், 
"மரங்கள் நமது கிரகத்தின் உயிர்நாடிகள், மரங்கள் நடுவதன்
மூலம், நமது சுற்றுசூழலுக்கு பங்களிப்தோடு மட்டுமல்லாமல், 
நமது தாய் பூமியையும் பாதுகாக்கின்றோம் வரவிருக்கும்
எதிர்காலத்திற்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வது நமது
கடமையாகும் என கூறினார்.
சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட  பெற்ற 
தன்னார்வதொண்டு நிறுவனமான வனத்துக்குள் திருப்பூருடன்
இணைந்து இந்த நிகழ்சிஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின்
ஆதரவு இந்த முயற்சியின் வெற்றிக்காகஉதவியாக இருந்தது.
பள்ளி வளாகம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும்
மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள், 
ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும்
வனத்துக்குள் திருப்பூர் உறுப்பினர்களால், மரக்கன்றுகள் நட்டு
வைத்தனர்.
ஒவ்வொரு கேடட்டும்  தங்களின் மரக்கன்றுகளுக்குத் தங்கள்
தாயின் பெயரால் பெயரிட்டு, அதை பாதுகாப்பதாக உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.

No comments