Breaking News

உடுமலை ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கும் கழிவு நீர்





உடுமலை ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கும் கழிவு நீர் 

உடுமலை ராமசாமி நகர் பழனியாண்ட நகர் உள்ளிட்ட தெற்கு பகுதி குடியிருப்புகளுக்கு செல்ல பிரதான வழித்தடமாக பெரியார் நகர் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக இந்த பாலத்தில் ஆண்டு முழுவதும் சாக்கடை கழிவுநீர் தேங்கி வருகிறது. 
எனவே ரயில்வே சுரங்க பாலத்தில் கழிவுநீர் சேகரிப்பு கிணறு நீர், வெளியேற்றும் மோட்டார் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நகராட்சி சார்பில் இதற்கான பணிகள் நடந்தும் ரயில்வே மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் தொடர்ந்து பல அடி உயரத்திற்கு கழிவுநீர் தேங்கி வருகிறது இதற்கு தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments