Breaking News

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை


ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்
எண்ணிக்கை நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
 பேரூர் பட்டீஸ்வரசாமி கோயில் உதவி ஆணையர் விமலா, மாசாணியம்மன்
கோயில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் திருமுருகன்,
மஞ்சுளாதேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, சலவநாயக்கன்பட்டி
ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
 நிரந்தர உண்டியல் திறப்பில் 56 லட்சத்து 31ஆயிரத்து 955 ரூபாயும், தட்டுக்காணிக்கை
உண்டியலில் 23 லட்சத்து 17 ஆயிரத்து 199 ரூபாயும் என மொத்தம் 79 லட்சத்து 49 ஆயிரத்து
154 ரூபாய் கிடைக்கப்பெற்றது. பலமாற்று பொன்னினங்கள் 130 கிராம், பலமாற்று
வெள்ளியினங்கள் 179 கிராம் கிடைக்கப்பெற்றது. 

No comments