உடுமலை அருகே டெம்போ கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்
பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடி, தென் குமாரபாளையம், சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து விவசாய பணிக்காக 407 சரக்கு வாகனத்தில் 53 நபர்களை ஏற்றிக்கொண்டு உடுமலைப் பகுதிக்கு இன்று சென்றுள்ளனர்.
அப்போது, உடுமலை அருகே உள்ள வாழவாடி பகுதியில் அம்மாபட்டி பிரிவில் வாகனம் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் 6 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
No comments