Breaking News

ஸ்ரீ நாராயண குரு பிறந்தநாளில் குமரி மாவடத்திற்கு விடுமுறை வேண்டும். தமிழக அரசுக்கு ஈழுவா தியா பேரமைப்பு கோரிக்கை


 ஸ்ரீ நாராயண குரு பிறந்தநாளில் குமரி மாவடத்திற்கு விடுமுறை வேண்டும்

தமிழக அரசுக்கு  ஈழுவா தியா பேரமைப்பு கோரிக்கை

ஸ்ரீ நாராயண குரு பிறந்தநாளன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு ஈழுவா தியா பேரமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஈழுவா தியா பேரமைப்பு தலைவர் செந்தாமரை குமரி மாவட்டத்தை சேர்ந்த பால்வளத்துறை அமைச்சருக்கு வழங்கிய கோரிக்கை மனு...
ஸ்ரீ நாராயண குரு கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் செம்பழந்தி என்னும் பகுதியில் பிறந்தவர். கேரள மக்களால் மிகவும் வழிபட கூடியவர். இவர் பிறந்த தினம், மறைந்த தினத்தன்று கேரளாவில் விடுமுறை வழங்கப்படுகிறது.1956ம் ஆண்டு வரை கேரள மாநிலத்தோடு இருந்த குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தோடு இணைக்கப்படும் வரை குமரி மாவட்டத்தில் ஸ்ரீ நாராயண குரு பிறந்தநாள், இறந்தநாளன்றும் விடுமுறை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1956க்கு முன்பு வரை கேரளாவோடு இருந்த குமரி மாவட்டமும், செங்கோட்டை தாலூக்காவிற்கு கேரள அரசு வழங்கிய சலுகைகளை, தமிழக அரசும் வழங்கும் என்று தமிழகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட பிறகு ஸ்ரீநாராயண குரு பிறந்தநாளுக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை.  குமரி மாவட்டத்தில் அவரை வழிபடக்கூடிய மக்கள் அதிகம் இருப்பதால் குமரி மாவட்ட அமைச்சரான நீங்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து விடுமுறை பெற்றுத்தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

No comments