Breaking News

வனத்துறை சார்பில் யானைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு


வனத்துறை சார்பில் யானைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

 வனத்துறை சார்பில் அங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
 நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமை வகித்து மாணவர்களுக்கு யானைகளை பாதுகாப்பதின் அவசியம், யானைகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார். யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் அதிக தூரம் இடம்பெயரும் என்பாதல் வனப்பகுதியில் கண்ணாடி பொருட்கள் வீசக்கூடாது, கண்ணாடி துகள்கள் யானைகளின் பாதத்தில் காயம் ஏற்படுத்தினால் அது யானைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.

---

No comments