Breaking News

அன்னூர் ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

அன்னூர் ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
வியாழக்கிழமை நடைபெற்றது. 
அன்னூர் ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்சிக்கு பள்ளி
 தாளாளர் அம்பாள் எஸ்.ஏ.நந்தகுமார் தலைமை வகித்தார். பள்ளியின் செயலர் சுமதி, துணை செயலர் விஷ்ருதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கோர்சிகா நான்சி வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் சதீஸ்பாபு, முன்னாள் பேரூராட்சி தலைவர் செளந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். இந் நிகழ்சியில் சிலம்பம். யோகசனம், ஸ்கேட்டிங், கராத்தே மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை மஞ்சள் நிற அணியினர் பெற்றனர். அந்த அணியினர் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற
அனைவருக்கும் கோப்பைகள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  
இந் நிகழ்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், உதவி தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments