Breaking News

நெடுங்குன்று பகுதியில் பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குனர் ஆய்வு

நெடுங்குன்று பகுதியில் பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குனர் ஆய்வு
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ் தேஜா நெடுங்குன்று பழங்குடியினர் கிராமம் குடியிருபிற்கு செல்ல சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.  

நெடுங்குன்றில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இரவு நேரங்களில் மனித- வனவிலங்கு மோதலை தவிற்க இரவு நேரங்களில் வீடுகளுக்குச் செல்வதற்கு குறுக்குவழிகளை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 

 வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்தில் மனித விலங்கு மோதலை கட்டுப்படுத்த ஸ்மார்ட் விர்ச்சுவல் வேலி (SMART VIRTUAL FENCING) அமைக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

 மேலும் (SMART VIRTUAL FENCING) பற்றிய முக்கியத்துவத்தையும் பயனையும் பொது மக்களிடம் தெறிவித்தும் SMART VIRTUAL FENCING பற்றிய பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

 வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் வலசை யானைகள்  
வருகை தொடங்கிவிட்ட காரணத்தினால் மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும்,  மனித விலங்கு மோதலை கட்டுப்படுத்த வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

No comments