Breaking News

வால்பாறை நல்லக்காத்து எஸ்டேட் பகுதியில் தீ விபத்து

வால்பாறை நல்லக்காத்து எஸ்டேட் பகுதியில் தீ விபத்து 
வால்பாறை அடுத்த நல்ல காத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. தேயிலை தோட்டத் தொழிலாளர்.

 இவர் இன்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்று விட்டார்.

 அப்போது, வீட்டில் ஏற்றி இருந்த தீபத்தில் இருந்து தீ பரவி வீடு முழுவதும் பற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீ அணைக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

No comments