Breaking News

வடுகபாளையம் ரயில்வே கேட் திறப்பு பொதுமக்களுடன் இணைந்து அதிமுகவினர் கொண்டாட்டம்

வடுகபாளையம் ரயில்வே கேட் திறப்பு 

பொதுமக்களுடன் இணைந்து அதிமுகவினர் கொண்டாட்டம்
பொள்ளாச்சியில் இருந்து வடுகபாளையம் செல்லும் ரயில்வே கேட் சமீபத்தில் மூடப்பட்டது.

 இதனால், பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்தது.

 இதை அடுத்து, எம் எல் ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன், அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரயில்வே கேட்டை திறக்க கோரிக்கை வைத்தனர்.

 இந்நிலையில், திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயில்வே கேட் திறக்கப்பட்டது. 

இதை அடுத்து ரயில்வே கேட் திறக்கப்பட்ட இடத்தில் எம்எல்ஏ பொள்ளாச்சி வி ஜெயராமன், 
 அதிமுக நகர  செயலாளர்  கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

   மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, நகரக் கழகப் பொருளாளர்  கனகு, நகர அம்மா  பேரவை செயலாளர் சுந்தரம், மாவட்ட பிரதிநிதி இரும்பு குரு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் காளிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வசந்த், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜா, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ்குமார், நகர் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ரவி, வழக்கறிஞர்கள்  அருள் பிரசாத்,  விக்ரம், சண்முகம், கவிதா, செல்வத்துரை,  அசோக், நாகராஜ், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் சதிஷ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments