Breaking News

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் வீடுகள் அதிக சேதம் புதிய வீடுகள் கேட்டு கோரிக்கை

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் வீடுகள் அதிக சேதம் 

புதிய வீடுகள் கேட்டு 
 கோரிக்கை
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருகே எல் எப் காலனி என்ற இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமின் ஒரு பகுதியில் 30க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
 இவர்களது வீடுகள் சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளதாகவும், விஷ ஜந்துக்களின் அபாயம் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், தங்களுக்கு உள்ள குறைகளை அதிகாரிகள் யாரும் வந்து கேட்பதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
 இந்நிலையில், இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், புதிய வீடுகள் கட்டித் தரக் கோரியும் பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்திற்கு 20க்கும் அதிகமான இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்கள் வருகை புரிந்து கோரிக்கை மனு அளித்தனர்.

No comments