வரும் 19ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தீர்மானம்
வரும் 19ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தீர்மானம்
பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 44 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது குறித்து திட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை பி ஏ பி அலுவலகத்தில் நடைபெற்றது.
பி.ஏ.பி திருமூர்த்தி திட்ட குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திட்டக்குழு உறுப்பினர்கள் அருண், நித்தியானந்தம், நல்லதம்பி, குருசாமி, ஈஸ்வரன், தெய்வ சிகாமணி, ஈஸ்வரமூர்த்தி, பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பி ஏ பி தொகுப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பு, எதிர்காலத்தில் நீர் வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு வரும் 19ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
120 நாட்கள் உரிய இடைவெளி விட்டு நான்கு சுற்று தண்ணீர் வழங்கலாம் எனவும், வரும் நாட்களில் நீர்வரத்து நல்ல நிலையில் இருந்தால் கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் வழங்கலாம் எனவும், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு இதேபோல், நான்கு சுற்று தண்ணீர் வழங்கவும், தண்ணீர் இருப்பு இருந்தால் கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் வழங்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பி ஏ பி திட்டக்குழு தீர்மானம் கருத்துருவாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டு தண்ணீர் திறக்கப்படும்.
No comments