தேங்காய் விலை சரிவை தடுக்க தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும்
தேங்காய் விலை சரிவை தடுக்க தேங்காய் எண்ணெய்யை அரசு நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமிக்கவுண்டர் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமிக்கவுண்டர் கோரிக்கை.. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களுக்கு நோய் தாக்குதல் மற்றும் உற்பத்தி இழப்பு என பல்வேறு பிரச்சனைகளை தென்னை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். ஆகவே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தவும் அரசு தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்து பயிர்களை முழுமையாக பயன்படுத்திய பிறகுதான் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உள்நாட்டு என்னை பொருட்கள் விலை குறைந்து விடும். தென்னை மரங்களில் நோய் தாக்குதல்களை சரி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments