வெள்ளமடை ஊராட்சியில் ரூ. 1.13 கோடிமதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
சர்க்கார்சாமக்குளம் ஒன்றியம், வெள்ளமடை ஊராட்சியில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்க்கார்சாமக்குளம் ஒன்றியம், வெள்ளமடை ஊராட்சியில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்குளம் திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, முன்னாள் எம்.பி ஏ.பி.நாகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அபிநயா ஆறுக்குட்டி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய
பொறியாளர் கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார்
கலந்து கொண்டு ரூ.89.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளமடை- சாமநாயக்கன்பாளையம் தார் சாலை அமைக்கும் பணி, ஜெ.ஜெ நகரில் ரூ.11.03 லட்சம் மதிப்பீட்டில் புதிய சம்ப் கட்டும் பணி, பொதிகை கார்டனில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து சாமநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட கீழ்நிலைத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சாமநாயக்கன்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை திறந்து வைத்து கொடியேற்றினார்.
இந் நிகழ்சியில் ஊராட்சி துணைத்தலைவர் கணேசன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி துணைத்தலைவர் மணி(எ)விஜயகுமார், ஒன்றிய துணை செயலாளர் பர்வீனா, திமுக நிர்வாகிகள் கந்தசாமி, சரவணம்பட்டி மாணிக்கம், நீலாவதி, சமூகநீதிகட்சி பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராஜ், மாணிக்கராஜ், நந்து (எ)விஜயகுமார், ஒன்றிய பொருளாளர் வைரமுத்து,பழனிசாமி,நீலாவதி, திலீப், ராஜகோபால், கோவிந்தராஜ், பாபு, சின்னசாமி, அய்யாசாமி, மணிகண்டன், பர்வினா பழனிசாமி, கோபால், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments