Breaking News

வால்பாறை நகராட்சி கூட்டத்தில் தர்ணா




கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் நகரமன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் தலைமையில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு வால்பாறை நகராட்சி ஆணையர் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கி சற்று நேரத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் தா.ம.செந்தில் நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வால்பாறை நகராட்சியில் நடக்கும் பணிகளை பற்றி நகர்மன்ற தலைவருக்கும் நகரமன்ற உறுப்பினர்களுக்கும் எதுவும் தெரிவதில்லை தற்போது மழைக்காலம் என்பதால் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்புச்சுவர் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் சாலைகள் போன்ற பணிகள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியால் எந்த வேலைகளும் நடைபெறாமல் தடை ஏற்படுத்துவதாகவும், இதனால் தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் நிலை உள்ளது தமிழக முதல்வர் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் மற்றும் சிறப்பான திட்டங்கள் கொண்டு வருகிறார் இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்க கூடாது என்று நகர்மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் தலையீட்டால் இதுவரை மூன்று முறை டெண்டர் நடக்காமலும் எந்த பணிகளும் நடக்காமல் போயுள்ளது, இவர்கள் அதிகாரிகளை மிரட்டி அவர்களை வேலை செய்ய விடுவதில்லை என்றும் இது அடையாள போராட்டம் தான் அடுத்து தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவோம் என்று கூறினார். அவருடன் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். உடனடியாக வால்பாறை காவல் ஆய்வாளர் திரு.ஆனந்தகுமார் வால்பாறை நகராட்சிக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணாவை கலைத்தனர். இதனால் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments