கிணத்துக்கடவு அருகே சாலை விபத்து நான்கு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி, 6பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள தீபாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி.
தனது உறவினரை கோயம்புத்தூரில் உள்ள விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு கிணத்துக்கடவுவழியாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
காரில் பாலாஜியின் உறவினர் கோபாலகிருஷ்ணன்(60) பயணம் செய்தார்.
கார் கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைக் குளம் அருகே கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்தது.
கார் அடுத்தடுத்து எதிர் திசையில் வந்த மூன்று இரு சக்கர வாகனங்களில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பட்டணம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (50) நல்லட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி ( 59), பட்டனம் பகுதியை சார்ந்த சம்பத் ( 43), மார்ச்சநாயக்கன்புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (30), குமார்( 50), மரகதம் ( 45), ஆகியோரும், காரை இயக்கி வந்த பாலாஜி (28) உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த எட்டு பேரையும் ஆம்புலென்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மார்ச்சநாயக்கன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, குமார் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.
No comments