இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை
பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் பத்திரகாளி அம்மன் கோயில் அருகில் வசித்து வருபவர் அருண்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுகன்யா (30) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் தாத்தூர் பகுதியில் தோட்டத்து சாலையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தோட்டத்து சாலையில் இருந்து நகரத்திற்கு சென்று வசிக்கலாம் என சுகன்யா கணவரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது.
இதில் சுகன்யா மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று சுகன்யா(30) தனது குழந்தை தனுஸ்ரீ (7), குழந்தை அகிலன் (4) ஆகிய இருவரையும் தங்களது தோட்டத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மூவரும் உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் உடல்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனைமலை போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
No comments