பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்ல ஆழியாறு குரங்கு அருவி வழியாக செல்ல வேண்டும். இந்நிலையில், குரங்கு அருவி அருகே பழமையான பெரிய மரம் ஒன்று சாலையில் இன்று மாலை சுமார் 6.30 மணி அளவில் விழுந்தது.
இதனால், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
No comments