Breaking News

ஆழியாறு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் அரசு ஸ்தூபி

ஆழியாறு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் அரசு ஸ்தூபி 
பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பிஏபி திட்டம் மூலம் பாசன வசதி கிடைப்பதுடன், இந்த திட்டம் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
 இது தவிர, இந்தத் திட்டத்தில் மின் உற்பத்தி நிலையங்களும் செயல்படுகின்றன.
 பரம்பிக்குளம் -ஆழியாறு நீர் மின் உற்பத்தி திட்டம் கடந்த 1963 ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் காமராஜரால் துவங்கப்பட்டது. அதன் அடையாளச் சின்னமாக ஆழியாறு பகுதியில் ஒரு ஸ்தூபி ஒன்றும் நான்கு சிங்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த ஸ்தூபியில் பரம்பிக்குளம்- ஆழியாறு நீர் மின்சார திட்டம் காமராஜரால் துவங்கப்பட்டது என்று கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
 இந்த ஸ்தூபி பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மட்டுமாவது இந்த ஸ்தூபியை சுற்றியுள்ள புதர்களை அகற்றி ஸ்தூபிக்கு வர்ணம் அடித்து பராமரித்து வந்தார்கள்.
 ஆனால், தற்போது எந்த பராமரிப்பும் இல்லாமல் ஸ்தூபி புதர் மண்டி கிடைக்கிறது. 
இந்து மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறும்போது... இந்த ஸ்தூபி அடையாளச் சின்னமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது பராமரிப்பு இல்லாமல் கிடப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

No comments