உடுமலையில் எம்பி அலுவலகம் திறப்பு
உடுமலையில் எம்பி அலுவலகம்
உடுமலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் மு.பெ.. சாமிநாதன் திறந்து வைத்தார்.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் உடுமலை கச்சேரி வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் எம்பி ஈஸ்வரசாமி, திமுக செயலாளர் இல. பத்மநாபன், அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் வேலுச்சாமி, உடுமலை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மறைமலை மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, நகர்மன்ற தலைவர் மத்தீன் மற்றும் ஆறுச்சாமி சக்திவேல், மகாலிங்கம், ஷாம்பிரசாத் ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், மெய்ஞான மூர்த்தி, செந்தில்குமார், செழியன், அனிக்கடவு கிரி, அடி வெள்ளி முரளி, சாகுல் ஹமீது மற்றும் காளியப்பன், கதிர்வேல், கமலக்கண்ணன், தாராபுரம் தனசேகரன், மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டணி கட்சிகள் சார்பில் தென்னரசு காங்கிரஸ், மதுசூதனன் ( மா .கம்யூ.) ஈஷாக் ( இ.கம்யூ) தமிழரசு முன்னாள் எம்பி கிருஷ்ணன் மதிமுக ரகுபதி ராகவன்( கொமதேக), விடுதலைச் சிறுத்தைகள் சதீஷ்குமார், முஸ்லிம் லீக் சித்திக், மமகஅப்துல் கபூர், திராவிடர் கழகம் கிருஷ்ணன், மக்கள் நீதி மையம் குருமூர்த்தி, திராவிட இயக்க தமிழ் பேரவை பிரகாஷ் மற்றும் இளவேந்தன் திருப்பதி உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments