கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு
கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு
பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50,000 ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாவது மண்டலத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் தண்ணீர் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தூணக்கடவு அணையில் இருந்து சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்துவிட்டு காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. திருமூர்த்தி அணைக்கு நீர் சென்று சேர்ந்த பிறகு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
No comments